தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடலில் அதிக காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை

Aug 21 2019 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடலில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், அடுத்த மூன்று நாட்களுக்கு, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

வங்க கடலில் நிலவி வரும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது என, அறிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம், மேட்டூர், அரியலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில், 7 சென்டி மீட்டர் மழையும், விருதுநகர், கோவிளன்குளம், நாமக்கல் திருச்செங்கோடு பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடலில், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00