தடைசெய்யப்பட்ட என்ஜின், வலைகளை பயன்படுத்துவதாக புகார் - நாகை, காரைக்‍கால் மீனவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தல்

Aug 21 2019 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தடைசெய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை பயன்படுத்தும் நாகை மற்றும் காரைக்‍கால் மீனவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி, சென்னை காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலையை பயன்படுத்துவதுடன், அதிவேக குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை, விசைப்படகில் பொருத்தி, சென்னை கடல் பகுதியில் மீன் பிடிப்பதனால், சென்னை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் காசிமேட்டில் இருந்து ஆந்திரப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்து படகுகளை சேதப்படுத்துகின்றனர். காரைக்கால், நாகை மீனவர்களை பிடிக்க முடியாததால், ஆந்திர மீனவர்கள், தங்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாக, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, சென்னை மீனவர்களுக்கு தடை விதித்தது போன்று, காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களுக்கும், அரசாங்க விதிப்படி 240 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3625.00 Rs. 3877.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50000.00
மும்பை Rs. 50.40 Rs. 50000.00
டெல்லி Rs. 50.40 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50000.00