இமானுவேல் சேகரனின் 62-வது நினைவுதினம் - பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்தில் டிடிவி தினகரன் மாலையணிவித்து மரியாதை

Sep 11 2019 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, சிவகங்கை மாவட்டம் சார்பில் மானாமதுரை அருகே கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மானாமதுரை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு. ராமலிங்கம் - ஜெயா தம்பதிகளின் பெண் குழந்தைக்கு, "அபிராமி" என கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பெயர் சூட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை தந்த கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, மாவட்டம் கழக நிர்வாகிகள் சார்பில் தலைப்பாகை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில், திரு. டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00