உதகையில் பொது மக்களுக்கு நோய் ஏற்படுத்தும் மறுசுழற்சி குப்பை மையம் : வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை - சாலை மறியல்

Sep 11 2019 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதகையில் பொது மக்களுக்கு நோய் ஏற்படுத்தும் மறுசுழற்சி குப்பை மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்‍கோரி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் சேகரிக்கபடும் பல டன் குப்பைக்‍ கழிவுகள், காந்தல் முக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் மறுசுழற்சி குப்பை மையத்திற்கு எடுத்துச் செலல்பட்டு அங்கு உரமாக மாற்றப்படுகிறது. அண்மைக்‍காலமாக இந்த மையத்தில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மறு சுழற்சி மையத்தை ஒட்டி வசிக்‍கும் மக்கள், நோய் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், துர்நாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் சுவாசக்‍ கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகக்‍கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர், மறுசுழற்சி மையத்தை முற்றுகையிட்டு, உதகை - காந்தல் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த உதகை நகராட்சி சுகாதார அலுவலர் உள்ளிட்டோர்களை சிறை பிடித்த பொதுமக்கள், மறுசுழற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்‍கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00