பொருளாதார வீழ்ச்சியால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் - சிறையிலிருக்கும் ப.சிதம்பரம் சார்பில் குடும்பத்தினர் மீண்டும் டுவிட்டர் பதிவு
Sep 11 2019 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதிம்பரம் தரப்பில், ட்விட்டரில் மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ காவலில் இருந்தபோதே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்ததை விமர்சனம் செய்த அவர், சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இன்று காலை சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்திய பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாகவும், இதனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சரிவு மற்றும் நாட்டின் இருளை போக்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்றும் சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.