கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்து விபத்து -ஆற்றில் தத்தளித்த 36 பேர் பத்திரமாக மீட்பு

Sep 12 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்ததால் ஆற்றில் தத்தளித்த 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கொள்ளிடம் ஆற்றைக் கடந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலராமநல்லூர் கிராமத்திற்கு பரிசலில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்ற பின்னர் மாலையில் அவர்கள் மீண்டும் பரிசல் மூலம் 36 பேர் கபிஸ்தலத்திற்கு புறப்பட்டனர். அப்போது எதிர்பாரத விதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது பரிசல் கவிழ்ந்தது. இதனால் ஆற்றில் விழுந்தவர்களில் பலர் நீந்தி கரை சேர்ந்தனர். சிலர் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகளில் ஏறிக் கொண்டனர். பரிசல் கவிழ்ந்தது குறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், 36 பேரையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் கிடைத்தவுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சம்பவம் நிகழ்ந்த குடிகாடு கிராமத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00