தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை - பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

Sep 12 2019 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெப்பம் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கழிவு நீரும், மழைநீரும் ஒன்றாக கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. மழைநீர் செல்லும் பாதைகளை முறைப்படுத்தி மழைநீர் முறையாக நீர்நிலைகளுக்கு செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான கீழப்பளூர், வாலஜாநகரம், ஓட்டக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழைபெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்துநிலையம், துறைமங்களம், நான்குரோடு, வாலிகண்டபுரம், குன்னம், பாடாலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கரூர், குளித்தலை, வாங்கல், வேலாயுதம்பாளையம், நெரூர், மண்மங்களம் ஆகிய பகுதிகளில் மழைபெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தை சேர்ந்த பிரதீப் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் வினோத் பாண்டி தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00