நெல்லையில் அமமுக நிர்வாகி மீது காவல்துறையினர் தாக்குதல் : போலீசாரின் அராஜகத்தை கண்டித்து சாலை மறியல்

Sep 12 2019 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பாளையங்கோட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் விஎம் சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக 22 வது வார்டு கழக செயலாளராக இருக்கும் திரு.ராஜா இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நெல்லை மாநகர போக்குவரத்து காவலர்கள் வழிமறித்து விசாரித்தனர். அப்போது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி என திரு.ராஜா தெரிவித்ததை அடுத்து காவல்துறையினரும், ஊர்காவல் படையினரும் ராஜா மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையை கண்டித்து பாளையங்கோட்டை பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை காவலர்கள் விரைந்து வந்து ராஜா மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00