அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் - டிடிவி தினகரன் அறிவிப்பு

Sep 12 2019 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, புதிய தலைமைக்‍கழக நிர்வாகிகளை திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக தேர்தல் பிரிவுச் செயலாளராக திரு. SVSP. மாணிக்‍கராஜா நியமிக்‍கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இவர், கழக தேர்தல் பிரிவுச் செயலாளராக நியமிக்‍கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திரு. ஜி.செந்தமிழனுடன் இணைந்து செயலாற்றுவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதேபோல், கழக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் நகர மன்றத் தலைவர் திரு.சிவா ராஜமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K.கதிர்காமு, பேராவூரணி, கொன்றைக்‍காட்டைச் சேர்ந்த திரு.S.K.தேவதாஸ், தூத்துக்‍குடி திரு.இரா.ஹென்றி தாமஸ், நடிகர் திரு.R.செந்தில் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக மருத்துவரணிச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி டாக்டர் S.முத்தையா, இணைச் செயலாளராக டாக்டர்.P.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். சுந்தரராஜ், தூத்துக்‍குடி தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக டாக்‍டர் எம். புவனேஸ்வரன் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கழக உடன்பிறப்புகள், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00