உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு - உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Sep 12 2019 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடியாக 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 28-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், அந்த அறிவிப்பாணையில், 29 மதிப்பெண்கள் நேர்முக தேர்வுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பல்கலைக்கழக மானியக்குழு விதிக்கு எதிரானது என்று மனுவில் தெரிவித்துள்ள ரமேஷ், அறிவிப்பாணையை ரத்து செய்வதோடு, பல்கலைக்கழக மானியக்குழு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு. வேலுமணி, உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும்30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00