கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட ஓ.ராஜா-வுக்‍கு தடை : உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை அதிரடி உத்தரவு

Sep 12 2019 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்படுவதற்கு, ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்‍கல் செய்த மனுவில், எவ்வித முன் அறிவிப்பின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று பதவியேற்றதாக குறிப்பிட்டிருந்தார். அவர்களில், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட அனைவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். எனவே, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்டுகொண்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓ.ராஜா செயல்பட இடைக்‍கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். குழுவில் உள்ள 17 உறுப்பினர்களும் செயல்பட இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஓ.ராஜா உட்பட அனைத்து உறுப்பினர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00