'காப்பான்' படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்கம்

Sep 12 2019 9:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
'காப்பான்' படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர். சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'காப்பான்' திரைப்படம், செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'காப்பான்' படத்தின் கதை தன்னுடையது என உரிமைகோரி, ஜான் சார்லஸ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 'காப்பான்' படத்தின் கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் கே.வி.ஆனந்த், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன், பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.

'காப்பான்' படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கே.வி.ஆனந்த், இதுபோன்ற வழக்குகளால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரும் இப்படி தானா? என்று நினைப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார். கதை திருட்டு வழக்கு தொடர்ந்தவர், தன்னைச் சந்தித்ததாக சொன்னதில் எந்த உண்மையும் இல்லை எனக்கூறிய கே.வி.ஆனந்த், 'காப்பான்' படம், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி பற்றியதே தவிர, நதிநீர் பங்கீட்டிற்கும், இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

கதை திருட்டு தொடர்பான புகார்கள், எப்போதுமே பெரிய படங்களுக்கு மட்டுமே வருவதாகக் கூறிய பட்டுக்கோட்டை பிரபாகர், இதிலிருந்தே அந்த புகார்கள் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவதாக குறிப்பிட்டார்.

தங்கள் மீது கதை திருட்டு குற்றம் சாட்டிய ஜான் சார்லஸ் மீது, அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும், படக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00