விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான விவசாய கூட்டியக்‍க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கண்டனம் - விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு

Sep 16 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான விவசாய கூட்டியக்‍க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், இந்திய தந்தி சட்டத்தைச் சட்டவிரோதமாக பயன்படுத்தி விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்க்‍கும் விவசாய சங்கங்களின் கூட்டியக்‍க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்‍காக அழைத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்‍கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, வயல்களின் வழியே உயர்மின் கோபுரங்களை அமைக்‍கும் பணிகளை மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன- மின்சாரப் பாதை அமைப்பதற்குத் தொடர்பில்லாத இந்திய தந்தி சட்டம்-1885ல் உள்ள பிரிவுகள் 10 மற்றும் 16ன் கீழ் சட்டவிரோதமாக அனுமதி பெற்றுக்‍கொண்டு வருவாய்த்துறை, காவல்துறை, அதிகாரிகளை வைத்து மிரட்டி விளை நிலங்களில் இதனைச் செயல்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் பணிகளை மேற்கொள்ளும்போது பொதுமக்‍களிடம் கருத்துக்‍ கேட்பு கூட்டங்களை நடத்துவதோ, திட்டத்திற்கான வரைபடத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதோ அவசியமில்லை என்பதால், எதேச்சாதிகாரமாக இதனைப் பயன்படுத்துவதாகவும் விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன- அரசு எந்திரத்தின் இத்தகைய அத்துமீறலைக்‍ கண்டித்து இந்திய தந்தி சட்டத்தின் நகல் எரிப்புப் போராட்டத்தை மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நாளை மறுநாள் நடத்துவதற்கு உயர்மின் கோபுரங்களுக்‍கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்‍கம் முடிவு செய்திருந்தது- இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகேயுள்ள மேற்கு சடையம்பாளையத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களது நிலங்களில் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள வந்த மத்திய அரசின் பவர்கிரிடு நிறுவன அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்- அப்போது விவசாய கூட்டியக்‍கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஈசன் உள்ளிட்ட 5 நிர்வாகிகளை பேச்சு நடத்த வருமாறு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களைக்‍ கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்- இந்த ஜனநாயக விரோத செயல் கண்டிக்‍கத்தக்‍கது என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் நாளை மறுநாள் நடத்த உள்ள போராட்டத்திற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் தனது ஆதரவைத் தெரிவிக்‍கிறது - போராட்டம் நடைபெறும் இடங்களில் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் நேரில் கலந்துகொண்டு விவசாயிகளுக்‍காக குரல் கொடுப்பார்கள் - விவசாயிகளின் உணர்வையும் அவர்களுக்‍கு ஏற்படும் பாதிப்புகளையும் புரிந்துகொண்டு மத்திய-மாநில அரசுகள், விளை நிலங்களுக்‍குப் பாதிப்பு இல்லாத வகையில் உயர்மின் கோபுரங்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00