சென்னையில் தலைமைக்‍ காவலரின் விரலை கடித்து துண்டித்த திருடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

Sep 16 2019 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், தலைமைக்‍ காவலரின் விரலை கடித்து துண்டித்துவிட்டு தப்பி ஓட முயன்ற திருடனை குடியிருப்புவாசிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து திருடமுற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ பகுதிக்‍கு சென்ற போலீசார், வட மாநில நபர் ஒருவர் குடியிருப்பு வாசிகளிடமிருந்து தப்ப முயல்வதற்காக அங்குள்ள கார் மற்றும் வீட்டு ஜன்னல்களை அடித்து உடைத்ததைக்‍ கண்டுள்ளனர். உடனடியாக தலைமைக் காவலர் சத்யமூர்த்தி அந்த திருடனைப் பிடிக்க முயன்றபோது, அவரது விரலைக்‍ கடித்து துண்டித்துவிட்டு தப்ப முயன்றுள்ளான். இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் திருடனைப் பிடித்து சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பல்வதூர் என்பதும், இதற்குமுன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, பல்வதூர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00