தலைக்கவசம் அணியாதவர்கள் மீது கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 18 வழக்குகள் பதிவு - தமிழக டி.ஜி.பி அலுவலகம் தகவல்

Sep 16 2019 7:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை தலைமை இயக்‍குநர் திரு.ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்‍கர வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு மண்டலத்தில் 25,778 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 22,931 பேர் மீதும் வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டலத்தில் 21 ஆயிரத்து 862 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 24,397 பேர் மீதும் வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 24,128 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது ஒரு லட்சத்து 18,018 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 36,835 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வாகனங்களில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைக்‍ கடத்தியவர்கள் மீது 542 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00