தூத்துக்குடியில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 கொலைகள் அரங்கேற்றம் - தொடர் கொலைகளால், அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்

Sep 17 2019 9:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 கொலைகள் நிகழ்ந்துள்ளன. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால், தூத்துக்குடி நகர மக்கள், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தூத்துக்குடி நகரின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு, நகரில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன. கடந்த ஜூலை மாதம் காதல் பிரச்னையில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, பட்டப்பகலில் நட்டநடு சாலையில் ஒருவர் படுகொலை, குளத்தூர் சாதி ஆணவ இரட்டை படுகொலை என, இந்த பட்டியில் நீள்கிறது. கிட்டத்தட்ட இரண்டே மாதத்தில் 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதம், திமுக பிரமுகர் கருணாகரன் என்பவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில், தென்பாகம் காவல்நிலையத்தின் முன்பே, வாலிபர் ஒருவர், பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரட்டை கொலை, மிகவும் அதிர்ச்சிக்குரியது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலை 3ஆவது தெருவை சேர்ந்த கப்பல் ஊழியர் முருகேசன் என்பவர், அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை மெதுவாக செல்லும்படி எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில் 7 பேர் கொண்ட கும்பல் முருகேசனையும், அவரது நண்பர் விவேக்கையும் கொடூரமாக வெட்டிக்கொன்றது.

இதேபோல், கூட்டுடன் காட்டில், ஊருக்கு வெளியே தனியாக இருந்த தனது நண்பரின் வீட்டு மாடியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கண்டித்ததால், மதுபோதையில் இருந்த அந்த கும்பல் சொரிமுத்து என்பவரை வெட்டிக் கொலை செய்தது.

இப்படி, சர்வசாதாரணமாக கொலை சம்பவங்கள் அரங்கேறக் காரணம், குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கடுகளவும் பயம் இல்லாமல் போனதுதான் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொலை நடந்தால், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்வதில், போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும், இதனால் கொலையாளிகள் எந்தவித பயமும் இல்லாமல் நடமாடுவதாகவும், சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒவ்வொருநாள் விடியும் பொழுதும் எத்தனை கொலைகள் அரங்கேறப்போகிறதோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் யாரும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு விடும். தொடர் கொலைகளால் எழுந்துள்ள இந்த அச்ச உணர்வை போக்குவது மட்டுமல்ல, தூத்துக்குடி நகரத்தை, அமைதி நிறைந்த நகரமாக மாற்ற வேண்டியதும் காவல்துறையின் தலையாய கடமையாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00