தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Sep 18 2019 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்‍கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று, ஈரோடு, வீரப்பன் சத்திரம், சூளை, சம்பத் நகர், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கரூர், குளித்தலை, மாயனூர், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கரும்பு, சோளம், வெற்றிலை போன்ற பயிர்களுக்கு இந்த மழை பெரும் பயனாக இருக்‍கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மற்றும் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கிய விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவதிகை, காடாம்புலியூர், புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அரியலூர் மாவட்டம் அரியலூர், திருமானூர், செந்துறை, உடையார்பாளையம், கீழப்பழுவூர், வி.கைகாட்டி, ஓட்டக்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. பாலக்கரை, ஸ்ரீரங்கம், தில்லைநகர், உறையூர், ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களிலும், திருவெறும்பூர், மாத்தூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00