பெரம்பலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை துரத்திப் பிடித்த போலீசார்-5 பேரை கைது செய்து விசாரணை

Sep 22 2019 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை திரைப்படப் பாணியில் போலீசார் துரத்திப் பிடித்து, 5 பேரை கைது செய்தனர்.

பெரம்பலூர் - அரியலூர் சாலையில் பேரளி டோல் பிளாசா என்ற இடத்தில் இன்று இரவு வழக்கம்போல் நெடுஞ்சாலை ரோந்து போநேற்றிரவு வழக்கம் போல் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் மார்க்கத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்தியபோது, லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், திரைப்படப் பாணியில் லாரியை துரத்திச் சென்றனர். இதனால் வேகமாகச் சென்ற லாரி, வேகத்தடைகளில் சக்கரத்தின் ஆக்சில் கட்டாகி நின்றது. பின்தொடர்ந்த போலீசார், லாரியை சுற்றிவளைத்து டிரைவர் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மணல் கடத்தல் லாரியை திரைப்படப் பாணியில் ரோந்து போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் கவுல்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00