அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை

Sep 23 2019 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டத்தில், கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்‍ கழகச் செயலாளர் பேராசிரியர் மா.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், கழக தலைமை நிலைய செயலாளர் திரு .உமாதேவன் பேசுகையில், கழகத்தின் வளர்ச்சிக்கு நிர்வாகிகள் ஊக்கமுடன் பணியாற்றி வெற்றியை நோக்கி செல்வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பரமநாதன், கழக செய்தி தொடர்பாளர் திரு. வீர வெற்றிபாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு.டிகே ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் இருந்து கழகத்தின் சார்பில் இளைஞர்கள் அதிகம் பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கழக மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் திரு.ஆர் பாலு உள்ளிட்ட ஒன்றிய நகர மகளிரனி நிர்வாகிகள் பலரும் கலந்துகொன்டனர்.

இதனிடையே, திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ராமாபுரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. இ.லக்கி முருகன், கழக வர்த்தக அணி செயலாளர் திரு. எம். செளந்திரபாண்டியன், கழக மகளிரணி துணை செயலாளர் காவேரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாண்புமிகு அம்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு மக்கள் விரோத எடப்பாடி அரசின் அவலங்களை அப்போது பட்டியலிட்டனர். முன்னதாக 1000 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நல உதவிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00