1-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை : குழந்தைகள், வன்கொடுமை பிரிவுகளின் கீழ் ஆசிரியை சிறையில் அடைப்பு

Sep 23 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி படுகாயம் ஏற்படுத்திய ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படம் வலைதளங்களில் வைரலானது. அந்த மாணவி யார், எதற்காக தாக்கப்பட்டார் என்பதை கண்டறிய கோரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மனு அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காயமடைந்த மாணவி படுவாக்கரையை சேர்ந்தவர் என்றும் அவர் பெத்தேல்புரத்தைச் சேர்ந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. பள்ளியில் நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுத வந்த அந்த மாணவி தேர்வறையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தது தெரியவந்தது.

மாணவியின் முதுகிலும் கையிலும் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி டியூசன் ஆசிரியை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து படுவாக்கரை பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை ஜெசிமோளை பிடித்து விசாரணை நடத்தியதில் கணித பாடத்தில் குறைவாக மதிப்பெண் பெறுவதால் மாணவியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த மாணவியை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார், மாணவியின் தாய் ஞானபாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெசிமோள் மீது குழந்தைகள் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00