படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது குற்றச்சாட்டு - தயாரிப்பாளர் சங்கத்தில் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

Oct 9 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் சிம்பு படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளாததால் தனக்‍கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சிம்புவின் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் தயாரிப்பு எண்-20 என்ற தற்காலிகப் பெயர் கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற முஃப்தி என்கிற படத்தின் தமிழ் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்தில் சிம்புவுடன், நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார். கன்னடத்தில் இப்படத்தை இயக்‍கிய நர்த்தனே தமிழிலும் இயக்‍கி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த வேலைக்‍காக நடிகர் சிம்பு வெளிநாடு சென்றுள்ளதாவும், இதனால் அவர் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளவில்லை எனவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். சிம்புவின் செயலால் தனக்‍கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00