'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - கைதான மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி நீதிமன்றம் மறுப்பு

Oct 9 2019 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் தந்தையும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவின், ராகுல், இவர்களின் தந்தையர், டாக்டர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது தந்தையும், போலி டாக்டருமான முகமது சபியும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேனி நீதிமன்றத்தில், மாணவர் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் இர்ஃபானின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த ஆவணங்கள் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருப்பதால் மாணவரை அங்கு ஆஜர்படுத்தும்படி நீதிபதி மகேந்திரவர்மா உத்தரவிட்டதை தொடர்ந்து, தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இர்ஃபான் ஆஜர்படுத்தப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00