பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்‍கு பாதுகாப்பு - பாரம்பரிய முறைப்படி வாழை மரங்கள், கரும்புகளுடன் கூடிய வரவேற்பு தோரணங்கள் அமைப்பு

Oct 10 2019 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.நரேந்திரமோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்‍காக போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர். வரவேற்பு ஏற்பாடுகளும் களைகட்டியுள்ளன.

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாளை வருகை தரவுள்ளனர். இதனை முன்னிட்டு, சென்னை விமான நிலையம் முக்கிய பிரமுகர்கள் வருகைக்‍கான ஐந்தாம் எண் கேட் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதலே மோப்ப நாய்கள் வரவழைக்‍கப்பட்டு, போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்களை வரவேற்கும் விதமாக இந்திய மற்றும் சீன நாட்டு தேசிய கொடிகள் பறக்‍கவிடப்பட்டுள்ளன. தமிழக பாரம்பரிய முறைப்படி வாழை இலை, வாழை மரம், கரும்பு மற்றும் வெற்றிலைக்‍ கொடி ஆகியவற்றைக்‍ கொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00