சீன அதிபரின் சென்னை வருகையையொட்டி போக்‍குவரத்து மாற்றம் - முக்‍கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை - மெட்ரோ, மின்சார ரயில்க​ளையும் நிறுத்த முடிவு

Oct 11 2019 9:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன அதிபர் இன்று சென்னை வருவதையொட்டி போக்‍குவரத்து ஸ்தம்பிக்‍கும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்‍கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ, மின்சார ரயில்களும் நிறுத்தப்பட உள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்திப்பு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இரு தலைவர்களும் மாமல்லபுரம் மற்றும் கோவளம் அருகே நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசவுள்ளனர். சீன அதிபர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வரவேற்பு முடிவடைந்ததும், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா 7 நட்சத்திர ஹோட்டலுக்‍கு சீன அதிபர் செல்கிறார். மாலை 4 மணியளவில் கிண்டியில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்கிறார். 4.55 மணியளவில், அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். மாமல்லபுரத்தில் கோயில்கள் மற்றும் தொன்மை வாய்ந்த சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு கலைநிகழ்ச்சிகளையும் இருவரும் கண்டுகளிக்கின்றனர்.

இந்நிலையில், சீன அதிபரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி உட்பட 3 ஆயுதம் தாங்கிய கப்பல்கள் கடலில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மீனவர்கள் 3 நாட்களுக்‍கு கடலுக்‍குள் செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

சீன அதிபரை வரவேற்று மாமல்லபுரத்தில், உயர்நீதிமன்ற அனுமதியுடன் பேனர்கள் வைக்‍கப்பட்டுள்ளன. இந்த பேனர்களில் தமிழ், இந்தி, சீன மொழியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சீன அதிபர் கிண்டியிலிருந்து மாமல்லபுரம் செல்லவிருப்பதால் ராஜீவ்காந்தி சாலையில் போக்‍குவரத்து மாற்றியமைக்‍கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிண்டியிலிருந்து மாமல்லபுரம் வழியாக செல்ல மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர் பாதையை சீன அதிபர் பயன்படுத்த இருப்பதால், அப்பாதையில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

சீன அதிபர் வருகையை முன்னிட்டு 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 34 மூத்த அதிகாரிகள் தனியாக நியமிக்‍கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிகளை கண்காணிக்‍க அதிகாரிகளும் நியமிக்‍கப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் மாமல்லபுரம் செல்லும் வழியில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் 500 சி.சி.டி.வி கேமராக்‍கள் பொருத்தப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00