பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை வருகிறார் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் - விழாக்கோலம் பூண்டது மாமல்லபுரம்

Oct 11 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து, சீன அதிபர் தங்கவிருக்கும் கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஹோட்டல் வரை வழிநெடுகிலும் 6 ஆயிரத்து 800 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக்‍குழுவினர் வரவேற்க உள்ளனர்.

சீன அதிபரை வரவேற்க, வழி நெடுவிலும் செண்டை மேளம், கோவை டிரம்ஸ், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகள் கொண்டு இசை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிண்டி நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்ட முகத்துவாரம் அமைக்கப்படவுள்ளது.

மாலை மாமல்லபுரம் புறப்பட்டுச் செல்லும் சீன அதிபருக்‍கு, வழிநெடுகிலும் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்‍கப்படுகிறது. மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உட்பட 55 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

சீன அதிபர் தரைவழி மார்க்‍கமாகச் செல்லும் வழிகளான சைதாப்பேட்டை நீதிமன்றம், காந்தி மண்டபம், மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகிய தமிழக கலாச்சாரங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைக்‍ கொண்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் மற்றும் சீன அதிபர் பார்வையிட உள்ள மாமல்லபுரம் நுழைவாயிலில், பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளையங்கள், அர்ஜுனன் தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளையம், ஐந்து ரதம் பகுதியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், கடற்கரைக் கோயில் நுழைவு வாயிலில் மலர்களால் ஆன அலங்கார வளையங்களும் வைக்கப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00