டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கல்

Oct 13 2019 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்‍கிணங்க, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

தென் சென்னை வடக்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு பகுதி கழகம் சார்பில், கோடம்பாக்கம் சிவன் கோவில் பகுதியில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. V. பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலளார் வ. சுகுமார் பாபு நிலவேம்பு குடிநீரை பொதுமக்‍களுக்‍கு வழங்கினார்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழகம் சார்பில், திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு. சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக தேர்தல் பிரிவுச் செயலளார் திரு. G.செந்தமிழன் மற்றும் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலளார் விருகை திரு. T.S. கண்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி பழங்கள் ஆகியவற்றை வழங்கினர். அப்போது வேளச்சேரி பகுதி கழக துணைச்செயலளார் திரு. அந்தோனி சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ம. கரிகாலன் தலைமையில், தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் ஜீ செந்தமிழன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. தாம்பரம் நாராயணன், தாம்பரம் நகர கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், அம்பத்தூர் பகுதி கழகம் சார்பில், கொரட்டூர், கலெக்டர் நகர், அம்பத்தூர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட 4 இடங்களில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. கே.ஏ.மலைமேகம், வழங்கினார். இந்நிகழ்ச்சிகளின் போது அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.கே.எஸ்.வேதாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

இதேபோல், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகம் சார்பில், எண்ணூர், தாழங்குப்பம் மற்றும் கத்திவாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், பிஸ்கெட் பாக்கெட் ஆகியவற்றை திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.பொன். ராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக மீனவர் அணி செயலாளர் திரு. டி. ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் நகர கழகம், ஒன்றிய கழகம் சார்பில், மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. மா தேவா தலைமையில், ஓசூர் தாலுக்கா அலுவலகம் முன்பு, பொதுமக்‍களுக்‍கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ந. ராஜேந்திரா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் நசீர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00