டெங்கு காய்ச்சலை தடுக்‍க தீவிர நடவடிக்‍கை - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் நிலவேம்பு குடிநீர் தொடர்ந்து விநியோகம்

Oct 13 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்‍கிணங்க, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில், புளியந்தோப்பு பகுதியில், நிலவேம்புக் குடிநீர், பப்பாளி மற்றும் கொசு வலைகளை, மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. டி.வி. நாசர் அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் நகர கழகச் செயலாளர் திரு. ஜெயகோபி தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கரிகாலன், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மறைந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை துணை செயலாளர் திரு. தாம்பரம் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மேற்கு பகுதி கழகம் சார்பில், தூத்துக்குடி அண்ணாநகரில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. புவனேஸ்வரன், பகுதி செயலாளர்கள் திரு. ஆறுமுகம், அசோக், எட்வீன்பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் போடி நகர் கழகம் சார்பில், தேவர் சிலை அருகே, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழகச் செயலாளர் திரு. முத்துச்சாமி, போடி நகர செயலாளர் திரு. ஞானவேல் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தருமபுரி தெற்கு ஒன்றியம் இலக்கியம்பட்டியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் திரு. டி.கே. ராஜேந்திரன் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். கழக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் திரு. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00