திருவள்ளூர் மாவட்டக்கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் : கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் வரும் 20-ம் தேதி நடைபெறும்

Oct 13 2019 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டக்‍கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்‍கூட்டம், கழகப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவத்தையும், மக்‍கள் நலக்‍ கொள்கைகளையும் இதயத்தில் ஏந்தி, லட்சியப் பயணம் மேற்கொண்டிருக்‍கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍கூட்டம், வரும் 20-ம் தேதி, காலை 10 மணியளவில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை, தச்சூர் கூட் ரோட்டில் அமைந்துள்ள ELL KAY YES திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் இக்‍கூட்டத்தில், திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் தெற்கு மாவட்டக்‍கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளைக்‍கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00