தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

Oct 13 2019 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்‍கிணங்க, டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு. தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, வடசென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் பகுதிக்‍ கழகம் சார்பில் வியாசர்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பெரம்பூர் பகுதி கழகச் செயலாளர் திரு.லஷ்மி நாராயணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக பொருளாளர் திரு. வெற்றிவேல் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி நகருக்குட்பட்ட பேருந்து நிலையம், மந்தக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கோமுகி மணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் திரு. பால்ராஜ், மாவட்ட அவைத் தலைவர்​திரு. பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை மாவட்ட கழக செயலாளர் திரு. பாலசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் திரு. கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் திரு. பார்த்திபன், நகர செயலாளர் திரு. சண்முகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகை தெற்கு மாவட்டம், கீழ்வேளுர் வடக்கு ஒன்றியம் மற்றும் கீழ்வேளுர் நகரக்கழகம் சார்பில், கீழ்வேளூர் கடைவீதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளர் திரு. ஆர்.சந்திரமோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. மு.சோ.பிரசாத், நகரக்கழக செயலாளர் திரு. அனூஸ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்று நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், மதுரவாயல் பகுதி கழகம் சார்பாக போரூர் ரவுண்டானா, வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு இ.லக்கி முருகன் வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம், திருவள்ளூர் நகர கழகம் சார்பில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, நிலவேம்பு குடிநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் வழங்கினர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம், புழல் ஒன்றியம் மற்றும் செங்குன்றம் பேரூராட்சிக்‍ கழகம் சார்பில், செங்குன்றத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி உள்ளிட்டவற்றை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. கே.மலை மேகம் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00