கீழடி 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக பார்வையாளர்களுக்கான அனுமதி இன்றுடன் நிறைவு - இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தகவல்

Oct 13 2019 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கீழடி 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக பார்வையாளர்களுக்கான அனுமதி இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அகழாய்வில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறைகிணறு, இரட்டை சுவர், பானை ஓடுகள், அணிகலன் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி நாகரீகம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து கீழடியை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள், மாணவ- மாணவியர், ஆராய்ச்சியாளர்கள் என இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கீழடியை பார்வையிட்டுள்ளனர். பார்வையாளர்களுக்கான அனுமதி இன்றுடன் நிறைவடைவதாக காலை முதலே பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். இன்று மட்டும் 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். அடுத்த 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மணலூர், அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது. அதற்கான மேற்பரப்பு ஆய்வு பணிகளையும் தொல்லியல்துறை தொடங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00