அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

Oct 16 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் பகுதி கழகம் சார்பில், வியாசார்பாடியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கழக பொருளாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. வெற்றிவேல் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், இனிப்புகள், பப்பாளி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பெரம்பூர் பகுதி செயலாளர் திரு. லட்சுமி நாராயணன் மற்றும் இந்த நிகழ்ச்சிக்‍கு ஏற்பாடு செய்த 36-வது வடக்கு கிழக்கு கழக செயலாளர் திரு.செல்வராஜ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் திரு. ராஜீ, வடசென்னை வடக்கு மாவட்ட கழக பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கழகத்தில் சிறப்பாக பணியற்ற நிர்வாகிகளுக்கு தலைகவசம், Rain coat வழங்கப்பட்டது.

தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணாநகர் பகுதி கழகம் சார்பாக, எம்.எம்.டி.ஏ காலனி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு தென்சென்னை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி கழகம், 105-வது வட்டக் கழகம் சார்பாக வட்டச் செயலாளர் சையத் அலி மற்றும் மாவட்ட மகளிரணி துனை செயலாளர் திருமதி விஜயா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலளார் திரு. சுகுமார் பாபு கலந்துகொண்டு, பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். காலை நேரத்தில் பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து நிலையத்தில் நிற்கும் பயணிகள் என அனைவரும் ஆர்வமுடன் நிலவேம்பு குடிநீரை வாங்கி பருகினர். கழக மாணவர் அணி செயலாளர் அண்ணாநகர் திரு. பரணீஸ்வரன், பகுதி செயலாளர் திரு. கே.என்.குனசேகரன், மாவட்ட நிர்வாகிகள் திரு. சுந்தரேன், திரு.கங்கன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. சுலைமான், திரு. விஜயரங்கன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் பகுதி கழகம் சார்பில், ஜீவரத்தினம் நகர் மற்றும் திருவிக நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. வடசென்னை தெற்கு மாவட்ட கழகம், ராயபுரம் பகுதி செயலாளர் திரு. A.C.லோகு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தானகிருஷ்ணன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 50-வது வடக்கு வட்ட கழக செயலாளர் திரு. டில்லிராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடசென்னை தெற்கு மாவட்ட கழகக்‍ துணைச் செயலாளர் திரு. டி.வி.நாசர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. காதர் மீரான், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஜெய்சேகர், மாவட்ட இணை செயலாளர் திரு. சிவராஜ், ராயபுரம் பகுதி இணை செயலாளர் திருமதி அமுதா, மாவட்ட மீனவரணி செயலாளர் திரு. சுந்தர் உள்ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் திரு. ஆர் கமலகண்ணன் ஏற்பாட்டில், உத்திரமேரூர் நெடுஞ்சாலை, நெல்வாய் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்‍கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டக்‍ கழகச் செயலாளர் மொளச்சூர் திரு. இரா, பெருமாள், பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றியம் பேரூராட்சி கிளை, மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்காசி அருகே உள்ள காசிமேஜர்புரம் பேருந்து நிலையம் அருகே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் நெல்லை புறநகர் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பொய்கை சோ மாரியப்பன், தென்காசி ஒன்றிய செயலாளர் திரு. பண்டாரம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.குமரேசன், ஊராட்சி கிளை செயலாளர் திரு.செண்பகராமன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு. மணிகண்டன் திரளான கழகத்தினர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00