அ.ம.மு.க-வை முறைப்படி பதிவு செய்ய முழுவீச்சில் நடவடிக்கை தேர்தல் ஆணையத்தில் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உரிய விளக்கம்

Oct 17 2019 9:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்ய, முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், கழகப் பொதுச்செயலாளர் டிடிவி திரு. தினகரன் சார்பில், கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்று, உரிய விளக்கங்களை அளித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்ய, ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, டெல்லியில், இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில், கழகத் துணைத் தலைவர் திரு. எஸ். அன்பழகன், கழகத்தின் மூத்த வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தை பதிவு செய்வது தொடர்பாக, தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர்கள் விளக்கமாக பதில் அளித்தனர். எடப்பாடி தரப்பினர் அளித்துள்ள ஆட்சேபனைகள் குறித்து, தேர்தல் ஆணையம் தெரிவித்தபோது, அதற்கு உரிய பதில்களை கழக நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் அளித்தனர். ஏற்கெனவே, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்களையும், முன்னுதராணங்களையும் கழக வழக்கறிஞர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெறும் என கழக துணைத் தலைவர் திரு. எஸ். அன்பழகன் உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00