சென்னை ஆர்.கே.நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீரகற்று வாகனத்தை டிடிவி தினகரன் வழங்கினார் - நாளை முதல் கழிவுநீர் அகற்றும் பணி தொடக்‍கம்

Oct 17 2019 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில், கழிவுநீரை அகற்ற கழிவுநீரகற்று வாகனத்தை, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளருமான, திரு. டிடிவி தினகரன் வழங்கினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், குறுகிய சாலைகள் இருப்பதால், கழிவுநீரகற்று வாகனம் செல்ல முடியாமல், சாலைகளில், கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. தொகுதி மக்கள் அடிப்படை பிரச்சனையில் முக்கிய கவனம் செலுத்தி வரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளருமான திரு. டிடிவி தினகரன், பொது மக்கள் நலன் கருதி, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், குறுகிய சாலைகளில் செல்லும் நவீன ஹைட்ராலிக் கசடுகள் அகற்றும் வாகனத்தை வழங்கினார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளர் திரு.நேதாஜி கணேசன், ஆர்.கே.நகர் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு. B. வெங்கடேசன் உள்ளிட்டோர், வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கினர். நாளை முதல் அனைத்து பகுதிகளிலும் இந்த வாகனம் மூலம் கழிவு நீர் அகற்றும் பணி நடைபெறும் என்று அ‌திகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00