ஆசியாவிலேயே முதன்முறையாக 5 வயது சிறுவனுக்கு டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் : ராஜன் டெண்டல் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Oct 17 2019 10:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆசியாவிலேயே முதன்முறையாக 5 வயது சிறுவனுக்கு டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் செய்து ராஜன் டெண்டல் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர விடுதியில் இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மருத்துவமனை இயக்குனர் டாக்டர். குணசீலன் ராஜன், ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் சமசுக்‍கு, இ.டி எனப்படும் எக்டோடெர்மல் டிஸ்ப்ளஷ்யா எனும் பாதிப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக சிறுவனுக்கு கீழ்த்தாடையில் பற்கள் இல்லாமலும், மேல் தாடையில் இரண்டே பற்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் சிறுவனுக்கு கழற்றி மாட்டக்கூடிய பல்செட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் கீழ்தாடை வெறுமையாக இருந்ததால் பல்செட்டை பொருத்தி பயன்படுத்த முடியவில்லை - அதனால் போதுமான உணவு சாப்பிட முடியாமல் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

உலக அளவில் இந்த பிரச்சினைக்கு டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் பொருத்துவது மட்டும்தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது என்றும், இந்த அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சையை சமசுக்‍கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசியாவில் முதன்முறையாக மிகக்குறைந்த வயதில் இம்ப்ளான்ட் சிகிச்சையை சிறுவன் சமஸ் பெற்றுள்ளான். உலக அளவில் பத்துக்கும் குறைவானவர்களே ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் இந்த சிகிச்சையை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00