தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை

Oct 18 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகிழக்குப் பருவமழை நேற்று முன் தினம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சீரான அளவில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்தனர். மழையால் கொடைக்கானலில் இருந்து -வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலைக்கு உட்பட்ட தைக்கால் பகுதி, சுங்கச்சாவடி, உகார்த்தே நகர், ஷெண்பகனுர் சாலை, குருசடி சாலை, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில், மச்சூர் பகுதியில் மரம் விழுந்ததால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் 15-க்கு மேற்பட்டோர் மரத்தை அகற்றினர். ஒருசில இடங்களில் பொதுமக்களே சேதமடைந்த சாலைகளை சீர் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகவும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழையும் பெய்தது. அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் சுழற்சி தீவிரமாகும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குளச்சல், குறும்பனை, வள்ளவிளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று இரவு சுமார் 30 நிமிடம் திடீரென கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கியது. கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியின் கீழ்தளத்திலும் மழைநீர் சூழ்ந்தது. கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் வணிக நிறுவனங்களை மழைநீர் சூழ்ந்ததாக கூறி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00