வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா எதிரொலி : நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மனு தாக்‍கல்

Oct 18 2019 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்‍காளர்களுக்‍கு பணப்பட்டுவாடா எதிரொலியாக, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு விரைவில் விசாரணைக்‍கு வரவுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் கிராமத்தில், பணப்பட்டுவாடா செய்த திமுகவைச் சேர்ந்த 8 பேரை கிராமமக்கள் பிடித்து, பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி தொகுதியில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி, பணப்பட்டுவாடா செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் திரு. சங்கர சுப்பிரமணியன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நாங்குநேரி தொகுதியில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00