பொள்ளாச்சியில் அகழியில் தவறிவிழுந்து இறந்த ஆண் யானை : மழை காரணமாக அகழியில் சறுக்கி விழுந்து உயிரிழப்பு

Oct 18 2019 8:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சியில் அகழியை கடக்க முயன்ற போது தவறி விழுந்து ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சரளபதி கிராமத்தில் தனியார் தோட்டத்திற்கு அருகே இருந்த அகழியில் சிக்கி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்து, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அகழியில் இறந்துகிடந்த யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 30 வயதுடைய இந்த ஆண் காட்டு யானை, அகழியை கடக்க முயன்ற போது, அதில் சறுக்கி விழுந்து தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்தது. உயிரிழந்த அந்த காட்டு யானை உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு மாமிசத்திற்கு விடப்படும் என்று வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒரே ஆண்டில் ஒரு பெண் யானை உட்பட நான்கு யானை இதுபோல் உயிரிழந்திருப்பது வனத்துறையினர் மத்தியிலும், வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00