கணவரை கத்தியால் குத்த வந்தவரை தடுத்தபோது கொலையான மனைவி : குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

Oct 18 2019 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
கணவரை கத்தியால் குத்த வந்த நபரை தடுத்தபோது, மனைவி கொலையான சம்பவத்தில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி பகுதியில் வசித்து வந்த வெள்ளைச்சாமி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அழகுராஜ், வெள்ளைச்சாமியிடன் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெள்ளைச்சாமியை தாக்‍க முயன்றார். அப்போது வெள்ளைச்சாமியின் மனைவி சண்முகத்தாய் ஓடிவந்து, கணவரை காப்பாற்ற முயன்றபோது, அழகுராஜ், சண்முகதாயை கத்தியால் குத்திய நிலையில், படுகாயமடைந்த சண்முகத்தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பந்தமான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அழகுராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00