உதகையில் தொடர் மழை - 50-க்‍கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு - மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு

Oct 18 2019 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் மழையால் 50-க்‍கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் உதகை - மஞ்சூர் சாலை, மஞ்சூர் - கோவை சாலை மற்றும் உதகையிலிருந்து பல கிராமங்களுக்கு செல்லும் சாலையில் 50-க்‍கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் சாலையில் விழுந்தும் போக்குவரத்து பாதிக்‍கப்பட்டது.

மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. உதகை - மஞ்சூர் சாலையில் மண்சரிவு காரணமாக சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பணிக்‍குச் செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பாதிக்‍கப்பட்டனர். மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00