பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்‍க திட்டம் - பாலம் அமைக்‍கும் பணிக்‍காக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

Oct 18 2019 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்‍கும் பணிக்‍காக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மண்டபம் நிலப் பகுதியையும், ராமேஸ்வரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் விதமாக கடந்த 1914-ம் ஆண்டு பாம்பன் கடல் நடுவே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்‍கப்பட்டு, 105 ஆண்டுகளைக்‍ கடந்தும், ரயில்​சேவை தொடர்கிறது. பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம், கடல் உப்புக் காற்று காரணமாக துருப்பிடித்து சேதமடைந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு வர வேண்டிய அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

புதிய பாம்பன் பாலம் அமைக்க சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வுப் பணி மேற்கொண்ட நிலையில், புதிய பாலம் அமைக்க மத்திய அரசு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

புதிய பாலம் அமைக்கும் பணிக்காக, சென்னையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் இன்று பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும், தனியார் ஒப்பந்ததாரர்கள் தங்களின் சர்வே பணியை தொடங்கினர். அதிநவீன இயந்திரங்கள் மண்டபம் ரயில் நிலையம் வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00