கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை

Oct 21 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

சென்னையை அடுத்த பெருங்குடியில், கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் 184-வது வட்ட கழக செயலாளர் திரு.கே.பி. கண்ணன், 186-வது வட்டக் கழக செயலாளர் திரு. நாராயணன் ஆகியோர் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கரிகாலன், சோழிங்கநல்லூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் மடிப்பாக்கம் திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், நத்தகடையூர் நகர ஒன்றிய பகுதிகளில், கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. சண்முகவேலு, காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் திரு. செந்தில்குமார், காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. பி.எஸ். ஆர் சுப்ரமணியம், வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் சண்முகராஜ், வெள்ளகோவில் நகரக் கழகச் செயலாளர் திரு. கணேசன், முத்தூர் பேரூர் கழக செயலாளர் திரு. நடராஜ், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. ராஜகோபால், சென்னிமலை பேரூர் கழக செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, நெய்வேலி 30-வது வார்டு பகுதியில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நகர செயலாளர் திரு. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி. திரு. முருகேசன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இதில் கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர் திரு. ராஜா பழனிவேல், மாவட்ட அவைத்தலைவர் திரு. கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் சார்பில் பேருந்து நிலையம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் ஒன்றிய செயலாளர் திரு. கார்த்திகேயன் நிலவேம்பு குடிநீரை பொதுமக்‍களுக்கு வழங்கினார். இதில் நகர செயலாளர் திரு. ராஜேந்திரன், ஓட்டுனர் அணி செயலாளர் திரு. பச்சாகவுண்டர் நகர அவைத்தலைவர் திரு. சுந்தரம், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சன்ரைஸ்.சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00