தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு

Oct 21 2019 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைப்போல், 17 மாநிலங்களைச் சேர்ந்த 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்ய பிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆய்வு செய்தார். மாலை 6 மணிக்கு இரு தொகுதிகளில் வாக்குப் பதிவு நிறைவுபெற்றது. வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நாங்குநேரியில் 84.36 சதவீத வாக்குகளும் விக்கிரவாண்டியில் சுமார் 66 புள்ளி ஒன்று சைபர் சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்தப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. நாங்குநேரி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு உள்ள ஒரு தனி அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அரசு பொறியியல் கல்லூரி சிசிடி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரத்தில் உள்ள இ.எஸ். தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உள்ள ஒரு தனி அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் வாக்குபதிவு நிறைவு பெற்றது. அவ்வப்போது மழை பெய்த நிலையில், மழைக்கு மத்தியிலும் வாக்காளர்கள் தங்களின் வாக்கினை வரிசையில் காத்திருந்து செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஸ்ட்ராங் ரூமின் பத்திரமாக வைக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00