நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து

Oct 22 2019 8:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 22-ம் தேதி கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் சேவையும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று இரவே முகாம்களுக்கு அனுப்பி வைப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கபட்டு கண்காணிக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மழையினால் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் மலைச் சாலை மற்றும் கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் மாலைச் சாலை ஆகியவை சேதமடைந்துள்ளன. தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குணா குவை, தூண்பாறை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வெல்லகெவி உள்ளிட்ட மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த மலைவாழ் மக்கள் வரும் இரண்டு நாட்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00