கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை - ஆயிரம் கோடி ரூபாய், கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிப்பு - கல்கியின் மகன் மற்றும் மருமகளுக்கு சம்மன்

Oct 22 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். கல்கி மகன் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில், கணக்கில் வராத ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 நாட்களாக நடைபெற்ற சோதனையில், 44 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மேலும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் ஆகியவை ‌கைப்பற்றப்பட்டன.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளதும், வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது. ஹவாலா முறையில், கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளதாகவும், கல்கியின் மகன் மற்றும் மருமகள், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கல்கியின் மகன் மற்றும் மருமகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00