விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் வைக்‍கப்பட்டுள்ள மையங்களுக்‍கு பலத்த போலீஸ் பாதுகாப்பு - நாளை மறுநாள் வாக்‍கு எண்ணிக்‍கை

Oct 22 2019 7:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்‍குப்பதிவு நிறைவடைந்து, வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்‍கு எண்ணிக்‍கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், சுமார் 84 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகளும், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 66 புள்ளி மூன்று ஐந்து சதவிகித வாக்குகளும் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை அரசுப் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள தனி அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மூன்றடுக்‍கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அரசுப் பொறியியல் கல்லூரி சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்களில் வாக்‍குப்பதிவு நடைபெற்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இ.எஸ் தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. துணை ராணுவப்படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியறையைச் சுற்றிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படவுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00