குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம்

Oct 22 2019 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்‍குடி மாவட்ட மீனவர்கள், கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை.

கிழக்கு மத்திய அரபிக்‍ கடற்பகுதியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, மாலத்தீவு மற்றும் வட இலங்கை கடற்பகுதிகளில் மணிக்‍கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்‍குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்‍கை விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை ஒதுக்கபட்டுள்ளன. இதேபோல் மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டுப் படகுகள் கரை ஒதுக்கபட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடல்பகுதியில் பலத்த காற்று வீசுவதால், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00