நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்‍கை - நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்‍கு இன்று விடுமுறை - கொடைக்‍கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்‍கு 2 நாட்கள் தடை

Oct 22 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவில் மிதமான மழை பெய்தது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகைக்‍கு இரண்டு நாட்கள் அனுமதி மறுக்‍கப்பட்டுள்ளது.

திண்டுக்‍கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு உட்பட்ட சுற்றுலா இடங்களுக்கும், பிற சுற்றுலாப் பகுதிகளுக்கும் அடுத்த இரண்டு தினங்களுக்‍கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் வெள்ளகெவி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் வசிக்‍கும் மலைவாழ் மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து அண்டை கிராமங்களுக்கும், பிற இடங்களுக்கும் செல்ல ஆறு, நீரோடை போன்ற நீர் வழித்தடங்களை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பாதையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டு, சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற மலை கிராமங்களில், மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளின் மீது மரங்கள் விழுந்தாலும், மின்கம்பங்கள் சேதமடைந்தாலும், அவற்றின் அருகில் செல்ல வேண்டாம் என மின்வாரியத்துறை கேட்டுக்‍கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00