நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு

Oct 22 2019 9:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்‍கு இன்று விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. காந்திபுரம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் மண்சரிந்து, மரம் விழுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து, சாலையில் மண் மற்றும் கற்குவியல்களை அகற்றினர். இதனால் 5 கிலோமீட்டர் வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குன்னூரிலிருந்து கோவை செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டன. குந்தா - உதகை சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00