தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை

Oct 22 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, வடபழனி, சேப்பாக்கம், மெரினா, , தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, , திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சத்திரம் பேருந்து நிலையம், விமான நிலையம், தில்லை நகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

நாகை மாவட்டம் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறையில் பலத்த மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது. இது, விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கனமழையால் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாளவாடி அடுத்த சிக்கள்ளி, தொட்டகாஜனூர் மற்றும் பல கிராமங்களில் உள்ள ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு சாலை போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. ஓடைகள் மற்றும் தரைப்பாலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும்போது, அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம் என பேரிடர் மேலாண்மைத் துறையினர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்‍கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00