தொழிலதிபரிடம் கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் 80 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பகிரங்கப் புகார் - மருமகனின் செயலுக்‍கும் தங்களுக்‍கும் தொடர்பு இல்லை என குடும்பத்தார் மறுப்பு

Oct 22 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொழிலதிபர் ஒருவரிடம் நுாதன முறையில் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவரிடம், வேலுார் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த ஜாகீர்அகமத் தமான் என்பவர், நூதன முறையில் பேரம் பேசியுள்ளார். தனக்கு தெரிந்த தொழில் அதிபர் 100 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், அவற்றை 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி தினேஷ் கொடுத்த 80 லட்சம் ரூபாயுடன் அகமத் தரப்பினர் மாயமாகினர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த நூதன மோசடிக்கு மூளையாக செயல்பட்டது மறைந்த கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி என்பது தெரியவந்தது. செல்வியின் மகள் டாக்டர் எழிலரசியின் கணவர் தான் இந்த ஜோதிமணி. ஜோதிமணி மற்றும் ஜாகீர் அகமத் தமானிடம் விசாரணை நடத்திய போலீசார், மோசடி விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தினகரன் பத்திரிகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தங்கள் மருமகன் டாக்‍டர் வி.எம். ஜோதிமணியின் செயல்களுக்‍கும், தங்கள் குடும்பத்தினருக்‍கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அவற்றுக்‍கு தாங்கள் பொறுப்பில்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தக்‍ குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்‍க செல்வியும், அவரது கணவரும் செய்த விளம்பரத்தால், இந்த நூதன மோசடி வெளி உலகிற்கு அம்பலமாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00